பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகியது குறித்து கமல் விளக்கம்..!

ஓ‌டிடியில் வெளி ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை அடுத்த வாரம் முதல் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

 

இந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கமல் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ஊடக நிறுவனத்தின் முழு ஒத்துழைப்போடு விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். இது மிகச் சிறிய தற்காலிக இடைவெளியே என்றும், மிக விரைவில் இந்த சீசனில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.