எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனி..!

விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடிக்கும் போது அதிகமாக சேலையில் தான் தோன்றி இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த லுக்கும் அதுதான்.

 

தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளரான ஜனனி ரச்சிதாவின் உடை பற்றி விமர்சித்து இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. ‘எருமைமாட்டிற்கு சேலை கட்டி விட்டது போல இருக்கு’ என ஜனனி சொன்னது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

 

ரச்சிதா அவரது கணவர் தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார் என்றாலும், பிக் பாஸ் சென்றதில் இருந்து தினேஷ தொடர்ந்து ரச்சிதாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஜனனிக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தற்போது அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். மைனா மற்றும் ஜனனிக்கு ஓட்டு போடாதீங்க என அவர் கூறி இருக்கிறார்.