கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கனமழை காரணமாக ரெட்டிக்குப்பம் பகுதியில் பழமையான தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி உள்பட நான்கு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கிய நால்வரையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






