புதுச்சேரி காரைக்காலில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விடுவேன் என மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கண்ணன் என்ற நபர் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் வெளியே கூறினால் முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெற்றோர் தீவிரமாக விசாரித்தபோது அந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






