பள்ளத்தில் சிக்கிய யானை மீட்பு..!

ள்ளத்தில் சிக்கிய யானையை இயற்பியல் கொள்கையின் மூலம் வனத்துறை அதிகாரிகள் மீட்ட வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி டுவிட்டரில் வெளியிட்டார்.

 

மேற்கு வங்காள மாநிலத்தின் மிதினாபுரத்தில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது என வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

 

அதனையடுத்து டிஎப்ஓ சந்தீப் பெர்வால் மற்றும் ஏடிஎப்ஓக்கள் தலைமையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் அதிகாலை 4 மணியளவில் மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்து யானை பத்திரமாக மீட்கப்பட்டது.