ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அத்தாணி பேரூராட்சியில் 3-வது வார்டு திமுக சார்பில் அய்யப்பன் என்பவர் போட்டியிட்டார்.
வீட்டில் இருந்த அவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர். வேட்பாளர் உயிரிழந்ததால் 3வது வார்டில் தேர்தலை ஒத்தி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






