கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் கோவை வடக்கு கோட்டாட்சியர் புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளார்.

 

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுக்கு வந்த கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விசாரணை செய்து சென்றார்.

 

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்தி என்கிற காளீஸ்வரன் ஆகிய மூன்று பேர் அனுமதிக்கப்பட்ட வார்டுக்கு கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் புதன்கிழமை காலை வந்தார்.

 

இந்த வழக்கில் கைதாகி மருத்துவனையில் கைது செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட கோட்டாட்சியரிடம் விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.