மார்ச் 10, 11ல் வேட்பாளர் நேர்காணல்..!

க்களவை தேர்தலின் திமுக சார்பில் போட்டியிட 2,934 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதற்கிடையே விருப்ப மனு அளிப்பவரிடம் நேர்காணல் நடத்தப்படும் தேதிகளை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளனர்.

 

அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பவரிடம் நாடாளுமன்ற தொகுதி வாரியாக நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விருப்ப மனு அளிப்பவர்களிடம் எம்ஜிஆர் மாளிகையில் நேர்காண நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை உள்ளிட்ட 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திங்கள் கிழமை அன்று திண்டுக்கல், கரூர், நாகை, தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நேர்காணலுக்கு வருபவர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திமுகவிலும் விருப்ப மனு அளிப்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.