கல்வி தொலைக்காட்சியைப் பார்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை வைத்து வருகைப்பதிவேடு கணக்கிட முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட சந்தன குளத்தில் குடிமராமத்து பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு கொரொனா பணிகளை மேற்கொண்டதற்காக சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் காலத்தின் தேவைக்கேற்ப பாடங்களை குறைப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் வாங்க பணம் கேட்க கூடாது எனவும் அவர் பதிலளித்தார்.







