96 படத்திற்காக நடிகை திரிஷா வாங்கிய சம்பளம்..!

டந்த 19 வருடங்களாக தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது கதாநாயகியாக மட்டுமல்லாமல், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

 

இவருடைய கைவசம் தற்போது பொன்னியின் செல்வன், கர்ஜனை, ராம், ராங்கி உள்ளிட்ட படங்கள் உள்ளன. நடிகை திரிஷா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருவதற்கு 96 படம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

 

ஏனென்றால், பல தோல்வி படங்களை கொடுத்து வந்த திரிஷாவிற்கு மாபெரும் வெற்றியை, 96 படம் தேடி தந்தது. இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை திரிஷா ரூ. 75 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.