3 அடி வாலிபரை மணந்த இளம்பெண்..!

பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா நீலக்குந்தா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவருக்கு வயது இருபத்தி எட்டு. இவர் அதே பகுதியில் பீடா கடை நடத்தி வருகிறார். பசவராஜ் 3 அடி உயரம் கொண்டவர்.

 

இதனால் அவருக்கு பல இடத்தில் பெண் தேடியும் வரன் அமையவில்லை. இந்த நிகழ்வு விஜயாபுரம் மாவட்டம் கோலார தாலுகா காணி கிராமத்தை சேர்ந்த ருக்மணி என்ற பெண்ணுக்கு பல்வேறு தோஷங்கள் இருந்த காரணத்தினால் திருமணம் தடைபட்டது. இதுபற்றி அறிந்த பசவராஜ், ருக்குமணியை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

 

அதன்பிறகு இரண்டு குடும்பத்தினரும் கலந்து பேசி பசவராஜ் ருக்குமணி திருமணத்தை பிப்ரவரி 21ம் தேதி நடத்தலாம் என முடிவு செய்தனர். அதன்படி இரண்டு பெரிய திருமணமும் நேற்று நீலகுந்தா கிராமத்தில் வைத்து நடந்தது. குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.