11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது..!

மிழகத்தில் 11 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கியுள்ளன. 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான +2 பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்குகிறது. இதைப் போல 11ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்க உள்ளது.

 

இதற்கு முன்பாக மார்ச் 7ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் செய்முறை தேர்வுக்கும் , பொது தேர்வுக்கும் இடையிலான இடைவெளி சில நாட்களே இருப்பதால் அதை முன்கூட்டியே நடத்த வேண்டும் என மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

 

பின் அந்த கோரிக்கையை ஏற்று தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன. இந்த செய்முறை தேர்வுகள் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது.

 


10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பா..?

பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 

சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பொதுத்தேர்வுக்கு முன்பு 2 திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தோம், எனவே பொது தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் திறக்க முதலமைச்சரை பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்..!

மிழகத்தில் ஆறு நாட்களுக்கு பிறகு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்க உள்ளன. கொரொனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

அதேசமயம் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது தேர்வு எழுதும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது.

 

அதனைத் தொடர்ந்து பொது தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அதேசமயம் தொற்று காரணமாக பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இதனிடையே வாக்குச்சாவடிகள் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் 6 நாட்களுக்கு பிறகு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்க உள்ளது.