10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வந்தது புதிய அப்டேட்..!

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பொது தேர்வுக்கான அட்டவணை நாளை காலை வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

ஒரு சில தினங்களில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியாகும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

 


10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் அலகு தேர்வு..!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் அலகு தேர்வுகளை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தேர்வு அட்டவணையை வெளியிட்டு உள்ளனர்.

 

இதன்படி 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் அலகு தேர்வு தொடங்கப்பட உள்ளது.

 

வினாத்தாள் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்றும் அவற்றை ஆசிரியர்கள் மாணவர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வினாத்தாள்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து விடைத்தாள்களில் தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

விடைகளை எழுதி முடித்த பிறகு அதனை புகைப்படம் எடுத்து ஆசிரியர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மாணவர்கள் அனுப்ப வேண்டும் என்றும் அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண்களை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.