10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வேலூர் மதிய சிறைவாசிகள் அசத்தல்..!

10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய வேலூர் மத்திய சிறைவாசிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். மகளிர் தனிச்சிறையில் இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய இரண்டு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

இவர்களில் ராதா என்பவர் 500க்கு 414 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 11-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய பெண் சிறைவாசிகள் இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் அமுதா என்பவர் 600க்கு 448 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

 

ஆண்கள் மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 27 பேரில் 25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மணிமாறன் என்பவர் 500க்கு 441 மதிப்பெண்களை பெற்றுள்ளார். 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய ஒன்பது பேரில் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!

2022 – 2023 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான கல்வியாண்டு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.

 

மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும்.

 


10, 12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது..!

த்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரொனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.

 

இதனையடுத்து இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடங்கியது.

 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 17ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ம் தேதியும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி வெளியாகிறது.

 


10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெறும்..!

10, 11, 12ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

மிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அந்த அட்டவணையை அறிவித்தார்.

 

அப்போது பேசிய அவர் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி நிறைவடையும் எனவும், பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு ஒன்பதாம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி நிறைவடையும் என்றும் கூறிய அவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி நிறைவடையும் என குறிப்பிட்டார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 


10, +2 திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தன..!

10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வைரல் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

திங்களன்று பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு பன்னிரண்டாம் வகுப்பு கணிதத் தேர்வு நடைபெற இருந்தது. திருவண்ணாமலையில் இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் கசிந்தது.

 

இது தொடர்பாக செய்யாறு காவல் நிலையத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டபோது தனியார் பள்ளிகளை சேர்ந்த சிலர் வெளியிட்டு இருப்பதாகவும் இனி இதுபோன்று நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார் .

 

இதனிடையே வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சட்ட ரீதியான விசாரணைக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

 


10,12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்..!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 10ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் நாளை முதல் 16ஆம் தேதி வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில திருப்புதல் தேர்வு நடைபெற இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

 

ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் 10 ம் தேதி நடைபெறுவதாக ஆங்கில பாட திருப்புதல் தேர்வு 17 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் அதை மாணவர் மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 


10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பா..?

பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 

சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பொதுத்தேர்வுக்கு முன்பு 2 திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தோம், எனவே பொது தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் திறக்க முதலமைச்சரை பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த அறிவுறுத்தல்..!

கொரொனா மூன்றாவது அலை அதிகரித்து வருவதால் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தவிர்த்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

இதுதொடர்பாக நெல்லையை சேர்ந்த ஒரு நபர் தொடுத்த வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார் .

 

ஆகவே அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.