12 ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியீடு..!

ன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

 

இதில் குறைந்த மதிப்பெண் பெற்ற மற்றும் தேர்ச்சியடையாத மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர்.இதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்த மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து, விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதனை பூர்த்தி செய்து, நாளை காலை 11 மணிமுதல் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிவரை, சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.