பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பி, மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது.
இதனிடையே ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் மாதம்பட்டி ரங்கராஜ் என்பதை குறிப்பிட்டு அதை வெளியிட்டார் ஜாய் கிரிசில்டா. மேலும், மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் என மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாகவும், ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை மிரட்டி ஜாய் கிரிசில்டா திருமணம் செய்துகொண்டார் எனவும், டிஎன்ஏ டெஸ்டில் அந்த குழந்தை தன்னுடையது தான் என நிரூபித்தால் அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தனது புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதியவில்லை என கூறி, மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிசில்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி இதுகுறித்து கூறுகையில், “எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பதே ஜாய் கிறிஸ்சில்டாவின் நோக்கம். ஜாய் கிறிஸ்சில்டா தங்களை பிரிக்க நினைக்கிறார். ஜாய் கிறிஸ்சில்டா விவகாரத்தில் எனது கணவர் ரங்கராஜிக்கு ஆதரவாக இறுதி வரை நிற்பேன். சட்டப்பூர்வ மனைவியான எனது குடும்ப வாழ்க்கையை நாசம் செய்ய ஜாய் கிறிஸ்சில்டா நினைக்கிறார்.






