விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி சில படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து இருக்கிறார். பவித்ரா லட்சுமி கடந்த சில மாதங்களாக உடல் நிலை மோசமானதால் எடை குறைந்து மிக மிக ஒல்லியாக இருந்தார்.
அதை இணையத்தில் பலரும் விமர்சித்து இருந்தனர்.இந்நிலையில் பவித்ரா லட்சுமி தான் தற்போது 37 கிலோவில் இருந்து எடையை அதிகரித்து 45 கிலோவாக மாறி இருப்பதாக இன்ஸ்டாவில் தெரிவித்து இருக்கிறார்.
தனது உடல்நிலை பற்றி தெரியாமல் மோசமாக பேசியவர்களுக்கு பதிலடியாக அவர் இதை பதிவிட்டு இருக்கிறார். உடன் இருப்பவர்களே தன்னை பற்றி மோசமாக பேசினார்கள் என்றும் அவர் ஆதங்கப்பட்டு இருக்கிறார்.






