ஒரே நாளில் 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு விகிதமானது 4.42 விழுக்காட்டில் இருந்து 5.0வாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






