வைரலாகும் உக்ரைன் வீரப்பெண்ணின் வீடியோ..!

க்ரைன் பெண்மணி ஒருவர் ரஷ்ய ராணுவ வீரரை ஒற்றை ஆளாக எதிர்த்து நிற்பது சமூகவலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. உக்ரைனுக்குள் புகுந்து உள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதில் முன்னேறி வருகிறது.

 

இந்த நிலையில் வெனிஸ் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஆயுதம் தாங்கிய ரஷ்ய வீரர்களிடம் தைரியமாக விவாதம் செய்துள்ளார். இந்த பெண்மணியின் வீடியோ வைரலாகி வருகிறது. எங்கள் மண்ணில் உங்களுக்கு என்ன வேலை என கேள்வி எழுப்பிய பெண் உங்கள் பாக்கெட்டில் சூரியகாந்தி விதையை போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

 

நீங்கள் மண்ணில் புதைக்கப்படும் போது அந்த விதைகள் முளைத்து சூரியகாந்திப் பூக்கள் மலரும் என தெரிவித்தார். சூரியகாந்தி மலர் உக்ரைன் நாட்டின் தேசிய மலர் என்பது குறிப்பிடத்தக்கது.