வாகனத்தை அச்சுறுத்திய சிறுத்தைபுலி..!

ள்ளிரவில் வனப்பகுதியில் சாலையை கடந்து சென்ற வாகனத்தை சிறுத்தை ஒன்று வழிமறித்தது. அந்த வழியில் செல்ல விடாமல் மூர்க்கமாக துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. கோத்தகிரி அருகே உள்ள வனப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, புலி உட்பட பல படங்களில் வருவது வாடிக்கையானது.

 

அப்படி இரவு நேரத்தில் அந்த வழியே வாகனமொன்று வனப்பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது அந்த சாலையின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த சிறுத்தை ஒன்று வாகனத்தை கண்டதும் ஓடி வந்து மறித்தது.

 

வாகனத்தை பார்த்து மூர்க்கத்தனமாக நடந்ததால் அச்சமடைந்த வாகன ஓட்டி வாகனத்தை ரிவர்ஸில் இயக்கினார். அதன்பின் சிறுத்தை மீண்டும் ஒருமுறை சென்று அமர்ந்திருந்தது. சில வினாடிகள் கழித்து டிரைவர் வாகனத்தை இயக்க சிறுத்தை மீண்டும் ஓடி வந்து வாகனத்தின் முன்பு நின்று கோபமாக உறுமியுள்ளது. வாகனத்தை ஒரு அடி நகர்த்தினாலும் மீண்டும் ஓடி வந்து நின்று துரத்தி உள்ளது.

 

நீண்ட நேரத்திற்கு பிறகு சிறுத்தை வாகனத்தை பார்த்து கத்தியபடியே சென்றுவிட்டது. இந்த காட்சிகளை வாகனத்திலிருந்தவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.