யூடியூபர் சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

பாசமாக பேசி வந்த யூடியூபர் சிக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திலகா என்பவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

 

அதில் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிகா ஆகியோர் ஆபாசமாக வீடியோ வெளியிட்டு வருவதாகவும் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில் சிறையில் உள்ள சிக்கா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளார். இதன் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.