இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 29 தமிழக மீனவர்கள் மற்றும் 82 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்த இருப்பதாக கூறியுள்ளார். கடந்த 30 நாட்களில் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்தை சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதாக கூறியுள்ளார்.
இது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். நீண்ட காலமாக நிலவும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இலங்கை, இந்தியா இடையிலான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ஏதுவாக இந்த பிரச்சினை குறித்து இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.






