மாத்திரை என நினைத்து ஹெட்போனை விழுங்கிய பெண்..!

லி நிவாரணி மாத்திரை என நினைத்து வயர்லெஸ் ஹெட் போனை விழுங்கிய பெண்ணின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர். அந்தப் பெண்மணி உடல்நலக்குறைவு காரணமாக கட்டிலில் படுத்து ஓய்வு எடுத்துள்ளார்.

 

ஒரு கையில் வயர்லெஸ் ஹெட்போன். இன்னொரு கையில் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்திருக்கிறார். அப்பொழுது அவருக்கு உடல் வலி ஏற்படவே அதற்கான மாத்திரை என நினைத்து ஹெட்போனை விழுங்கியுள்ளார். ஆனால் வலி குறையாமல் போகவே சிறிது சந்தேகம் அடைந்துள்ளார்.

 

உடனே தனது கையில் இருந்த ஹெட்போனை காணவில்லை என நினைத்து தேட தொடங்கியுள்ளார். தனது வலது புறமாக ஹெட்போன் இருப்பதாக அது காட்டியது. அப்பொழுது மியூசிக்கை ஒலிக்கச் செய்துள்ளார். அந்த மியூசிக் அவரது வயிற்றுப் பகுதியில் இருந்து வந்துள்ளது.

 

அப்போது தான் தன்னுடைய கவனக்குறைவால் மாத்திரை என நினைத்து ஹெட்போனை விழுங்கி விட்டதை உணர்ந்து உள்ளார். அதை தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அவரது உடம்பு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.

 

எக்ஸ்ரேயில் ஹெட்போன் வயிற்றில் இருந்துள்ளதை காண்பித்தது என்றாலும் ஹெட்போன் எந்த உடல் உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

 

அதை எப்படி வெளியே எடுப்பது என தெரியாமல் தவித்த அவர் அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டுமா என அச்சப்பட்டு இருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அடுத்த நாளே இயற்கையான முறையில் செல்போன் உடம்பை விட்டு வெளியே வந்து விட்டது.