நெல்லை மாவட்டம் பத்தமடையில் மர்ம காய்ச்சலால் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தமடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்துவின் மகள் பிரதிக்ஷா.
இரண்டரை வயது பிரதீப் சாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பிரதிக்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.