மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைது..!

தாவுத் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட பண மோசடி தொடர்பான வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் மீது புகார் கூறப்பட்டது.

 

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் நவாப் மாலிக் வீட்டிற்கு சென்ற அமலாக்கத் துறையினர் அவரை அலுவலகத்திற்கு அழைத்து வந்து காலை 8 மணி முதல் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

 

அவருடன் வழக்கறிஞரும் சென்றதாக நவாப் மாலிக் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு பிற்பகலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர்கள் மாளிகை நவாப் மாலிக்கை கைது செய்தனர். இதனிடையே கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத் துறை அலுவலகம் எதிரே முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.