முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு வேதா இல்லத்தில் அவரது அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு வீட்டில் குடியேற உள்ளதாகவும் ஜெயலலிதா பயன்படுத்திய கார் எங்கே என தெரியாததால் அது குறித்து புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். சசிகலாவிடம் எதுவும் பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.






