சென்னை அடுத்த ஆவடியில் டிப்போவிற்கும், பேருந்துக்கும் இடையே இரு சக்கர வாகனம் சிக்கி தீப்பற்றி எரிந்த நிலையில் விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. மூர்த்தியும், அவரது நண்பர் இருவரும் இருசக்கர வாகனத்தில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது பின்னால் வந்த லாரி மோதியதில் பேருந்து மற்றும் லாரியின் இடையே இருவரும் சிக்கிக்கொண்டனர்.
இதில் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து உள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.






