பிக்பாஸ் வீட்டை காலி செய்த வனிதா..!

பிக்பாஸ் அல்டிமேட் துவங்கி மூன்று வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் முதல் இரண்டு வாரங்களில் கெத்து காட்டி வந்த வனிதா மூன்றாவது வாரத்தில் கண்ணீர் விட்டு அழுது வருகிறார். என்னை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என பிக்பாசிடமே கன்பஷன் ரூமுக்குள் கதறி அழுதார்.

 

அவரை சமாதானப்படுத்த பிக்பாஸ் முயற்சித்தும் பிடிவாதமாக இருந்து விட வனிதாவை அக்ரிமென்ட் பத்தி பேசி பிக்பாஸ் மிரட்டியுள்ளார். அதை எல்லாம் என் வக்கீலை வைத்து பார்த்துக் கொள்வேன் என திருப்பி வனிதா கோபமாக கூறி என்னை வெளியே அனுப்பியே ஆக வேண்டும் என்று கூற, யோசிக்க பிக் பாஸ் டைம் கொடுத்துள்ளார்.

 

கமல்ஹாசன் தொகுப்பாளராக இல்லை என்பதால் மனமுடைந்து புதிய தொகுப்பாளரை எதிர்கொள்ள முடியாமல் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.