பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து இந்த பிரபலம் வெளியேறினாரா?

பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு படு வெற்றிகரமாக தொடங்கிய ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியில் இதற்கு முன் 5 சீசன்களில் வந்த போட்டியாளர்கள் தான் கலந்து கொண்டார்கள்.

 

16 போட்டியாளர்கள் இடம்பெற தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இப்போது பாலாஜி முருகதாஸ், தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், அபிராதி, ஜுலி என 6 பேர் மட்டுமே உள்ளனர். இடையில் எத்தனையோ பிரபலங்கள் வீட்டிற்குள் வந்து சில நாட்கள் இருந்துவிட்டு சென்றுள்ளனர்.

 

வரும் 10ம் தேதி நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் நடைபெற இருக்கிறது, இதில் யார் ஜெயிப்பார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் பாலாஜி தான் ஜெயிப்பார் என கூறி வருகின்றனர்.

 

தற்போது இன்று இரவு யாருக்கும் தெரியாமல் ஒரு போட்டியாளர் வீட்டைவிட்டு வெளியேற இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதிலும் அது அபிராமியாக இருக்கக் கூடும் என்கின்றனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.


பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 6 பைனலிஸ்ட் இவரா..?

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சினிமாவில் பெரிய எதிர்ப்புகளுக்கு இடையில் தொடங்கியது. முதல் சீசன் பெரிய சர்ச்சைகளில் எல்லாம் சிக்க அடுத்தடுத்து 5 சீசன்கள் சுமூகமாக முடிந்தது.5வது சீசன் முடிந்த கையோடு அல்டிமேட் என்ற நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 5 சீசன்கள் வரை பங்குபெற்ற போட்டியாளர்கள் கலந்துகொள்ள ஒரே அதிரடி சரவெடியாக இருந்தது.

 

சிம்பு தொகுத்து வழங்க ஆரம்பித்ததில் இருந்து நிகழ்ச்சி கொஞ்சம் சுறுசுறுப்பாக சென்றது. வரும் ஏப்ரல் 10ம் தேதி நிகழ்ச்சியின் பைனல் நடக்க இருக்கிறது, இதில் யார் ஜெயிப்பார்கள் என்று தெரியவில்லை.

 

இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் பைனலுக்கு செல்ல இருக்கிறார்கள். பாலாஜி, நிரூப், தாமரை, ஜுலி, ரம்யா பாண்டியன், அபிராமி என 6 பேர் தேர்வாகியுள்ளனர்.

 

இவர்களில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஜெயிக்க அதிக வாய்ப்பு பாலாஜி முருகதாஸிற்கு உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக கால் வந்தது எனக்கூறிய யாஷிகா..!

18 வயதில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகையாக வலம் வந்தவர் யாஷிகா. பஞ்சாப் மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு என்ற படம் மூலம் அறிமுகமானார். பிக்பாஸ் முடிந்த கையோடு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.

 

அந்த நேரத்தில் தான் கோர விபத்தில் சிக்கி தனது தோழியை இழந்தார். பின் 6 மாதம் படுத்த படுக்கையிலேயே இருந்த யாஷிகா இப்போது தான் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்.அதிகம் போட்டோ ஷுட்கள் செய்து பிஸியாக இருக்கும் யாஷிகாவிற்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

இதுகுறித்து லைவ் சேட்டில் ரசிகர்கள் ஒருவர் கேட்க அதற்கு யாஷிகா, ஆம், என்னை பிக் பாஸ் அல்டிமெட்டில் கலந்துகொள்ள கேட்டார்கள்.ஆனால், என்னால் பழையபடி டாஸ்க் பண்ண முடியாது, மேலும், நான் 18 வயசு இருக்கும் போது பிக் பாஸுக்கு போனேன். நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.


பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்

பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் சிம்பு தொகுத்து வழங்க ஆரம்பித்ததும் கொஞ்சம் சூடாக ஓடுகிறது. போட்டியாளர்களே கொஞ்சம் விளையாட்டை விறுவிறுப்பாக ஆட தொடங்கிவிட்டனர், ஆனால் சண்டைகள் மட்டும் ஓயவே இல்லை.

 

ஒவ்வொரு முறையும் போட்டியாளர்கள் இடையே சண்டைகள் நடந்துகொண்டு தான் வருகின்றன.தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒரு குட்டி வீடியோ வெளியாகி இருந்தது.

 

அதில் நிரூப் மற்றும் ஸ்ருதி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொள்வது போல் ஒரு நாடகம் நடத்தியுள்ளனர். அந்த புரொமோ வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகியது குறித்து கமல் விளக்கம்..!

ஓ‌டிடியில் வெளி ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை அடுத்த வாரம் முதல் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

 

இந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கமல் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ஊடக நிறுவனத்தின் முழு ஒத்துழைப்போடு விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். இது மிகச் சிறிய தற்காலிக இடைவெளியே என்றும், மிக விரைவில் இந்த சீசனில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.