சென்னை மந்தைவெளியில் நடிகை குஷ்பூ வாக்களித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ 126வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மந்தைவெளியில் இருக்கக்கூடிய ஒரு தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.







