கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி இணைப்பு தொடர்பாக அனைத்து மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை மேற்கொள்கிறது.
அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி இணைப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி இணைப்பு தொடர்பாக தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா தேர்தல் அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த கூட்டத்தில் நதிகள் இணைப்பு தொடர்பாக ஐந்து மாநில அதிகாரிகளின் ஒருமித்த கருத்தை மத்திய அரசு கேட்டிருந்தது. 5 மாநிலங்களில் ஒருமித்த கருத்துக்கு பின்னர் இந்தத் திட்டம் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






