சிதம்பரம் நகராட்சியில் அதிகாரிகளுக்கு நாய் வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்குள்ள ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு நாய் வாகனத்தில் உணவு கொண்டுவந்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.






