தேர்தலுக்காக போக்குவரத்து செய்த அதிரடி செயல் ..!

ள்ளாட்சி தேர்தலுக்கு வெளியூர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

 

சுமார் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ள இந்த தேர்தலில் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்களின் பயணத்திற்காக சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 2 லட்சம் பேர் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.