தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

இன்றும், நாளையும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

இதேபோல் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரியில் நாளை மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.