சிறுமிக்கு தெரியாமல் மைக்ரோபோன் பொருத்தி ரசித்த பெற்றோர்..!

லகளவில் கொரொனா உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டு வந்தாலும் மற்றொருபுறம் சமூக வலைத்தளத்தில் ரசிக்கும்படியான வீடியோ பதிவுகள் உலாவருகின்றன. இதுபோன்ற ஒரு வீடியோதான் தற்பொழுது இணையவாசிகளை ஈர்த்து வருகிறது.

 

வாஷிங்டனில் வசிக்கும் ஒரு நபர் தனது 4 வயது மகள் முதல் முறையாக ஸ்கோடிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடும் பொழுது அவரது தலைக்கவசத்தில் சிறிய வகை மைக்கை பொருத்தியுள்ளார்.

 

அந்த சிறுமியின் தந்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் அந்த 4 வயது சிறுமி முதல் முறை பனி சறுக்கு விளையாடும் போது அவள் ஆச்சரியத்தில் பேசும் வார்த்தைகள் பதிவாகியுள்ளது.

 

இது சிறுமியின் ரசிக்கும்படி உள்ளது. இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. அந்த பதிவில் குழந்தை தன்னைத்தானே ஊக்கப்படுத்தி கொள்கிறது.