கோவை மாநகராட்சியில் 97வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி 7,586 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 22 வயதேயான நிவேதா மேயர் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிவேதா மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.






