கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமல்..!

மிழகத்தில் கொரொனா பரவல் குறைந்ததால் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

 

அதன்படி கடந்த 12ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து கட்டுப்பாடுகள் மார்ச் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சமூக கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 200 நபர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.