கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்குள் நுழைந்தது ஹிஜாப் தடை..!

ர்நாடக மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு நுழைய தடை விதிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. கல்லூரியில் தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நாடகத்தில் கர்நாடகத்தை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

 

ஹிஜாபை அகற்றிவிட்டு வந்தால் மட்டுமே வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியதால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கல்லூரி எதிரே போராட்டம் நடத்தினர்.

 

இந்த தகவல் அறிந்து அங்குள்ள இஸ்லாமியர்களும் கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.