உக்ரைன் மீது நாளை 16ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்த இருப்பதாக உக்ரைன் அதிபர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் உக்ரைனில் ரஷ்ய எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா எல்லையில் குவித்துள்ளது. இதுகுறித்து சேட் லைட் படங்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
பயிற்சி முடிந்து வீரர்கள் ரஷ்யா திரும்பி விடுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட போதும் அதிபரின் முகநூல் கருத்து குறித்து அமெரிக்க ராணுவ தலைவரான பென்டுகன் விடுத்துள்ள அறிக்கையில் உக்ரைன் மீது நாளை படையெடுப்பு செய்ய புதிய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதில் நம்பிக்கையில்லை என்றும் அதே நேரத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி தாக்குதல் தொடுக்க கூடிய நிலையில் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டது.






