தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். முகம் தெரியாத இமயமலை சாமியாரின் வழிகாட்டுதலின்படி பங்கு சந்தையை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன் மீது இந்திய பங்குசந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி சமீபத்தில் 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருந்தது.
இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது வீடு, அலுவலகம் மற்றும் இதர இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது பணி காலத்தில் சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக தலைமை ஆலோசனை அதிகாரியாக அந்த பொறுப்புக்கான முன் அனுபவமில்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை நியமித்து அவருக்கு 4 கோடி ரூபாய் வருட சம்பளம் மற்றும் பல சலுகைகளையும் முறைகேடாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.






