2008ஆம் ஆண்டில் குஜராத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 2008ஆம் ஆண்டு ஜூலை 26ம் தேதி 22 இடங்களில் அடுத்தடுத்து பயங்கர சத்தத்தோடு வெடிகுண்டுகள் வெடித்தன. தொடர் குண்டுவெடிப்பில் 50 பேர் உடல் சிதறி பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சுமார் 80 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில் கடந்த 8ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 28 பேர் விடுவிக்கப்பட்டனர்.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை சிறப்பு நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.






