காதலனை கரம்பிடித்த சமந்தா..!
முதல் திருமண முறிவுக்குப் பின் பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த சமந்தா அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிட்டாடல்- ஹனி பன்னி என்ற ஓடிடி தொடரிலும் நடித்திருந்தார். விஷயம் இங்குதான் இருக்கிறது. பிக்கிள்பால் விளையாட்டின் சென்னை அணிக்குச் சொந்தக்காரரான சமந்தா, தனது வீரர்களை ஊக்கப்படுத்தும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், தான் நடித்த ஹனிபன்னி தொடரின் இயக்குநரும் இரட்டை இயக்குநர்களான ராஜ், டிகே-வில் ஒருவரான ராஜ் நிதிமோருவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டுள்ளார். சமந்தாவும் இயக்குநரை டேட் செய்வதாக டோலிவுட்டில் தகவல் பரவியது. எனினும், தொடர்ந்து ராஜ் உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் சமந்தா.
இப்படி இயக்குநர் ராஜ் நிதிமோரு மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் டேட்டிங் செய்வதாக கூறப்பட்ட நிலையில் அமெரிக்க சுற்றுலாவில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பகிரப்பட்டன. ஃபேமிலி மேன், ஃபர்சி உள்ளிட்ட இணைய தொடர்கள் மற்றும் பல திரைப்படங்களை இயக்கியவர் ராஜ் நிதிமோரு. இதில் ஃபேமிலி மேன் சீரிஸில் நடிக்கும்போது ராஜ் – சமந்தா இடையே பழக்கம் உண்டானதாக சொல்லப்பட்டது.
இதன்பின் ராஜ் நிதிமோரு இயக்கிய Citadel: Honey Bunny தொடரிலும் சமந்தா நடித்திருந்தார். இந்த சீரிஸுக்கு பின் இவரும் நடிகை சமந்தாவும் பொது இடங்களில் ஒன்றாக செல்வது அதிகமாகி வந்த நிலையில் இருவரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது. அந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க பயணத்தின் போது ராஜ் நிதிமோருவுடன் எடுத்த புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதற்கிடையே, ராஜ் நிதிமோருவை நடிகை சமந்தா திருமணம் செய்திருக்கிறார். அந்த புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 01-12-2025 என்று திருமண தேதியை குறிப்பிட்டிருக்கிறார். இன்று காலை ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங் பைரவி கோவிலில் அதிகாலையில் திருமணம் நடந்தது என்று திரையுலக வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்த நிலையில் தற்போது புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் சமந்தா.
திருமணத்திற்கு சமந்தா சிவப்பு நிற சேலையும், ராஜ் வெள்ளை நிற குர்தாவும் அணிந்துள்ளனர். இன்று காலை ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங் பைரவி கோவிலில் அதிகாலையில் திருமணம் நடந்தது.






