பள்ளிகளில் சாதிரீதியான அடையாளங்கள் கூடாது..!
மாணவர்கள் சாதி ரீதியிலான அடையாளங்களை பயன்படுத்தக்கூடாது என்று தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சாதிப் பிரிவினையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை ஆசிரியர்கள் எச்சரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கையில் கயிறுகளை அணிய கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.





