ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்து விபத்து..!
நெல்லையில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை அகற்றும் பொழுது மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்தது. 2 பேர் உயிரிழந்தனர். அம்பாசமுத்திரத்தில் இருந்து திருச்செந்தூர் வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லைன் இயந்திரங்களை கொண்டு மரங்களை அகற்றி உள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் சென்ற ஆட்டோவின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பெண் பயணி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.





