திரைப்பட பாணியில் தலையில் சிக்கிய பாத்திரம்..!
திருவள்ளூரில் குழந்தையின் தலையில் சிக்கிய சிறிய பாத்திரத்தை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் வினோத் ராஜ்.
ஒன்றரை வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சில்வர் பாத்திரம் தலையில் சிக்கியது. இதை எடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை அகற்ற முயன்றனர்.
இருந்தபோதும் பாத்திரத்தை அகற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது. தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை மீட்டனர். அந்த பாத்திரத்தை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.





