தாலி கட்ட சொல்லி கொடுத்த மணப்பெண்..!
உலகம் முழுவதும் திருமணங்களில் சடங்குகள் முறைகள் போன்றவை பின்பற்றி நடைபெறுகிறது. குறிப்பாக இந்திய முறையில் இந்து திருமணங்களில் பெண்கள் கழுத்தில் தாலி கட்டுவதும் அணிவிப்பதுமான முறையில் திருமணங்கள் நடக்கின்றன.
அப்படி நடந்த இந்திய முறையிலான திருமணம் ஒன்றில் தான் மாப்பிள்ளைக்கு தாலி கட்ட சொல்லி கொடுத்த மணப்பெண்ணின் வீடியோ வேகமாக தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் மணமகள், மணமகன் அமர்ந்தனர்.
ஆனால் இது திருமணத்தில் மணக்கோலத்தில் இருக்கு மாப்பிள்ளை முடிச்சு போட தெரியாமல் சிரமப்படுகிறார். இருவருக்கும் உரையாடல் நடக்கிறது. இதில் மாப்பிள்ளை தாலி கட்டுவதற்கு திணறுகிறார்.
இதனைப் புரிந்துகொண்ட மணப்பெண் தன் கழுத்தில் எப்படி தாலி கட்டுவது என்று மணமகனுக்கு படிப்படியாக கையசைத்து சொல்லிக் கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






