--- --:--:-- --

மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்: தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு ‘ஷாக்’

xdfger

திருப்பூரில், திமுக உள்பட மாற்றுக்கட்சியினர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அடிமட்ட தொண்டனும் உயர் பதவியை தரக்கூடியது அதிமுக மட்டுமே என்று, எம்.எல்.ஏ. பேசினார்.

 

திருப்பூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் முடியவுள்ள நிலையில், வேட்பாளர்கள் சுறுசுறுப்புடன் மனுதாக்கலில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த சூழலில், திருப்பூர் மாநகர திமுகவினருக்கு ஷாக் தரும் வகையில், அக்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அதிமுகவில் இணைந்துள்ளனர். மாநகராட்சி, 25 வார்டுக்கு 15 வேலம்பாளையம், எஸ்.பி. நகரில், 25பழனிச்சாமி என்பவர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக பிரமுகர்கள் இருவர் உள்பட 20 பேர், சால்வை போர்த்தி எம்.எல்.ஏ. விஜயகுமார் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

புதியதாக
புதியதாக அதிமுகவில் இணைந்த நிா்வாகிகள்

 

இந்த நிகழ்வில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. விஜயகுமார், “புதியதாக இணைந்தவகளுக்கு பாராட்டுகள். அவர்களுக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் உள்ளது. அதிமுகவின் வளர்ச்சிக்கு, நீங்களெல்லாம் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.

 

உழைப்பேற்ற அங்கீகாரத்தை கட்சித் தலைமை உரிய நேரத்தில் வழங்கும். அடிமட்ட தொண்டனும் கூட உயர் பதவிக்கு வரும் வாய்ப்பு, அதிமுகவில் மட்டுமே சாத்தியமாகக்கூடியது என்பதை நினைவில் கொண்டு, பலனை எதிர்பார்க்காமல் நீங்கள் அனைவரும் அதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபாடுங்கள்” என்றார்.

 

 

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் சௌந்தர்ராஜ் , சுந்தர்ராஜ், தங்கராஜ், ஜிகே சதீஷ், சஷ்டி சிவகுமார்,வீரையன், மாணிக்கம், பழனி முருகன், ரஞ்சித், ஆறுமுகம், எஸ்பி நகர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon