--- --:--:-- --

படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்..!

8

ள்ளக்குறிச்சி அருகே பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பின்னையூர் கிராமத்தில் இருந்து தியாகதுருகம் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று உள்ளது.

 

அந்த பேருந்தில் ஆபத்தான முறையில் பின் பக்கத்திலும் படிகளிலும் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்கள் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த காட்சியை பின்னால் வந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்ற அது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

 

மேலும் இந்த வழித்தடத்தில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாகவே மாணவர்கள் இப்படி பயணம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Right Menu Icon