8-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான எட்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டிருக்கிறது. வேட்புமனுத்தாக்கல் இன்னும் ஒருநாள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றன.
திமுக நேற்று ஒரே நாளில் 6 7 மற்றும் 8வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி, வார்டு வேட்பாளர் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
ஏழாவது பட்டியலில் மதுரை, சிவகாசி ஆகிய மாநகராட்சிகளில் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. நேற்று இரவு வெளியான எட்டாவது பட்டியலில் ஆவடி மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
கோவை, ஈரோடு, கடலூர் மாநகராட்சிக்கான வேட்பாளர்கள் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதேபோல திட்டக்குடி, திருவள்ளூர், திருத்தணி, மேட்டுப்பாளையம், கூடலூர், சிதம்பரம் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.







