--- --:--:-- --

2 லட்சம் அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்படும்..!

6

2 லட்சம் அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்ஷம் அங்கன்வாடி திட்டத்தின் கீழ் சிறந்த உட்கட்டமைப்பு வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஒலி, ஒளி அமைப்புடன் அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

 

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்காக ஷகிம் வக்ஸல்யா, ஷக்சம் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 ஆகிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சமூக மேம்பாட்டுக்கான திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 லட்சம் வீடுகள் கட்டப்படும் எனவும், இதற்காக 48,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon